×

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ₹558 கோடியில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, பிப். 29: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ₹558.45 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ₹104 கோடியில் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை கொண்ட கட்டிடம், மாமல்லபுரத்தில் ₹90.50 கோடியில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், ₹74.50 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையத்தை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துடன் இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி, திருவொற்றியூரில் ₹41.30 கோடியில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள், தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை ₹26.75 கோடியில் நவீனமயமாக்கும் பணி, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் ₹23.46 கோடியில் மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை அமைக்கும் பணி,

ஆலந்தூரில் ₹18.64 கோடியில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி, கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் ₹16.10 கோடியில் மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை அமைக்கும் பணி, புழல், மகாலட்சுமி நகரில் ₹14.75 கோடியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி வளாகம் கட்டும் பணி, சென்னையில், இரட்டை ஏரி, வில்லிவாக்கம், பாடி மற்றும் வடபழனியில் ₹14.30 கோடியில் மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி, வெளிவட்ட சாலையான மீஞ்சூர், வெள்ளனூர், குன்றத்தூர் மற்றும் வரதராஜபுரத்தில் 14 கோடியில் 4 உடற்பயிற்சி பூங்காக்களை மேம்படுத்தும் பணி, எண்ணூரில் ₹13.50 கோடியில் தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாயக் கூடம் புதுப்பிக்கும் பணி, கவியரசு கண்ணதாசன் நகரில் ₹13.40 கோடியில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் ₹12.40 கோடியில் சலவை கூடத்தை மேம்படுத்தும் பணி, செனாய் நகர், மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை ₹10.75 கோடியில் மேம்படுத்தும் பணி, அண்ணனூர், கோணம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ₹10 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி, பெரும்பாக்கத்தில் ₹8.55 கோடியில் பூங்கா மேம்படுத்தும் பணி, கோட்டூரில் ₹8.30 கோடியில் மாநகராட்சி விளையாட்டுத் திடலை மேம்படுத்தும் பணி, பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் ₹7.55 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் கட்டும் பணி, சென்னை, ராமாபுரத்தில் ₹7.40 கோடி மதிப்பீட்டில் பூங்காவை மேம்படுத்தும் பணி, சென்னை பெரம்பூர், முல்லைநகர் பேருந்து நிலையத்தை ₹6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, பம்மல், ஈஸ்வரி நகரில் ₹5 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்கும் பணி, சென்னை, கோடம்பாக்கம், புலியூர் கால்வாய் கரையை ₹5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணி என மொத்தம் ₹558.45 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ₹558 கோடியில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Development Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Chennai Archipelago ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...